[ad_1]
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் சோதனை நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கொங்கு இளைஞர் பேரவை பொதுச் செயலாளரான தனியரசு எம்.எல்.ஏ தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனாரின் 81-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசு சார்பாக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரான ராஜலெட்சுமி, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க சார்பாக எம்.எல்.ஏ-க்களான டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்தனர். அத்துடன், பல்வேறு அரசியல் கட்சியினரும் சமுதாய அமைப்பினரும் மாலை அணிவித்தனர். கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரான தனியரசு வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’முன்னாள் முதல்வர் வாழ்ந்த வேதா இல்லத்தில் சோதனை நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இல்லாவிட்டால் இந்த அரசு கிடையாது; இப்போது இருக்கும் முதல்வரும், துணை முதல்வரும் கிடையாது. ஒரு எம்.எல்.ஏ-வும் இருக்க முடியாது.
அவரது சமாதி இருக்கும் இடத்துக்கு இப்போது தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் அவரை மதிக்கிறார்கள். ஆனால், அவர் வாழ்ந்த வீட்டில் மத்திய அரசு சோதனை நடத்தியதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் அவர்மீது பற்றுக்கொண்ட முதல்வரும், துணைமுதல்வரும் இது தொடர்பாக தங்களுடைய எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும். முன்னாள் முதல்வரின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வரும் சூழலில், அந்த விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு நடந்துகொண்டிருக்கிறது. இது விசாரணை ஆணையத்தை மதிக்காத செயலாகவே கருதி, இதுகுறித்து தமிழக அரசு தங்களுடைய கண்டனத்தைக் கடினமாக பதிவுசெய்ய வேண்டும்’ என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது! தகிக்கும் தனியரசு
TAGS :
COMMENTS