[ad_1]
‘‘இளமைக் காலத்திலிருந்தே தைரிய உணர்வு என்னுள் ஒரு நெருப்பாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும். இது,தேவைப்பட்ட காலத்தில் பெரிதாகப் பற்றி ஒளிவிடும்போதுதான் மற்றவர்களுக்குத் தெரியும்’’ என்று சொன்ன அந்தத் தைரியசாலி வேறு யாரும் அல்ல... மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான். அவருடைய பிறந்த தினம் இன்று.
தைரியத்தைக் கொடுத்த நேரு!
இந்திரா காந்தியின் தந்தையான நேரு, சுதந்திரத்துக்காகப் பலமுறை சிறையில் காலந்தள்ளியபோதிலும் தன் மகளுக்கு அவர் கடிதம் எழுதத் தவறியதே இல்லை. ஒருமுறை தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில்,‘‘தைரியம் மட்டும் உன்னோடு இருந்துவிட்டால் போதும். மற்ற எல்லா நல்லவைகளும் அதைத் தொடர்ந்து உன்னிடம் வந்துவிடும்’’ என்று தைரியமான வார்த்தையைப் பதிவுசெய்து இருந்தார். அந்தத் தைரியம்தான் அவரைப் பின்னாளில் உயரத்துக்கு அழைத்துச் சென்றது. நேரு, தைரியத்தை மட்டும் தன் மகளுக்குப் பதிக்கவில்லை. ஒட்டுமொத்த உலக அரசியலையும், வரலாற்று நிகழ்வுகளையும் கடிதம் மூலம் தன் மகளுக்குக் கற்பித்துக்கொண்டே இருந்தார். அந்தக் கடிதங்கள் மூலம் பெற்ற ஞானம்தான், இந்திரா காந்தியை இரும்புப் பெண்மணியாக உலகுக்குக் காட்டியது.
சிறுவயது துணிச்சல்!
பொதுவாகத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தைரியசாலிகளாகத்தான் இருப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. சிறுவயது முதலே தைரியசாலியாகத்தான் விளங்கினார் இந்திரா காந்தி. லக்னோ நகர கல்லூரி, நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சிறப்பு விருந்தினராக இந்திராவை அழைத்திருந்தனர். அவர், செல்வதற்கு முன், மாணவன் ஒருவன் தன் தேசியக்கொடியை இரும்புத் தொப்பிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக அதைக் கீழே விழாதவாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். ஆனால், ஆங்கிலேயச் சிப்பாயோ அதைக் கீழே போடச்சொல்லிப் பலமாகத் தாக்கினான். குருதி சிந்தக் கீழே சாய்ந்தான் அந்த மாணவன். கொடி கீழே விழும்முன் அம்புபோலப் பாய்ந்து அதைத் தூக்கிப்பிடித்து நிறுத்தினார் இந்திரா. காவல் துறையினர் மூர்க்கமாகத் தாக்கினர். இந்திராவுக்கும் முதுகில் அடி விழுந்தது. ஆனாலும், தூக்கிப் பிடித்த கொடியைப் பறக்கவைத்துவிட்டே வீட்டுக்குச் சென்றார். அப்படிப்பட்ட துணிச்சல்மிகுந்த பெண்ணாக அன்றே விளங்கினார் இந்திரா.
நேர்மையான குணம்!
வீட்டில் நிலவிய சுதந்திரப் போராட்டச் சூழல், தாயின் உடல்நிலை இவற்றால் இந்திரா, பல ஊர்களில், பல பள்ளிகளில் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சாந்தி நிகேதனில் இந்திரா படித்தபோது, அவருடன் படித்த சக மாணவி ஒருவர் தனது தங்க நகையைக் காணவில்லை என்று விடுதிக் காப்பாளரிடம் புகார் சொன்னார். அவர், இந்திராவின் பெட்டியைத் தவிர, மற்ற மாணவிகளின் பெட்டிகளைச் சோதனையிட விரும்பினார். ஆனால், இந்திராவோ தன்னுடைய பெட்டியை முதலாவதாகத் திறந்து காட்டிச் சோதனைக்கு உட்படுத்தினார். இறுதியில், அந்த மாணவியின் நகைகள் குளியல் அறையில் இருப்பது தெரியவந்தது. இந்தச் செயல், இந்திராவின் நேர்மையான குணத்தைப் பிரதிபலித்தது.
‘‘இந்தியாவை ஆள முடியுமா?’’
தன் தந்தையிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடம் இந்திராவுக்கு ஒருபுறம் கைகொடுத்தாலும்... மறுபுறம், மனந்தளராது துணிவுடன் போராடியதால்தான் இளம் வயதிலேயே இந்தியாவின் முதல் பெண் பிரதமராக உருவெடுத்தார். இந்தியாவின் பிரதமராக அவர் பதவியேற்றபோது, ‘‘ஒரு பெண்மணியினால் இந்தியாவை ஆள முடியுமா’’ என ஒரு பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு இந்திரா, ‘‘I am no woman but human’’ என்று பதிலளித்தார்.
‘‘உலகில் இரு வகையான மனிதர்கள் உள்ளனர். ஒரு வகையினர், கடமையைச் செய்வோர்; மற்றொரு வகையினர், அதற்கான சன்மானத்தை எடுத்துக்கொள்வோர். நீங்கள் முதல் வகையினராக இருங்கள்... அங்குதான் போட்டிக் குறைவு’’ என்று சொன்ன இந்திரா, அதுபோலவே வாழ்ந்து காட்டினார்.
‘‘தீங்கு செய்தவர்கள்தான் அதிகம்!’’
‘‘அரசியலில் உங்களுக்கு எப்போதாவது அலுப்புத் தோன்றி இருக்கிறதா’’ என்று அன்னை இந்திரா காந்தியிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘நான் அரசியலின் அடிப்படை அம்சத்தைத்தான் நோக்குகிறேன். அதை ஒரு தொழிலாகவோ, போட்டிக்குரிய விஷயமாகவோ பார்ப்பதில்லை’’ எனப் பதிலளித்தார்.
இப்படி இந்தியாவின் விடுதலையிலும், ஆட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்த அன்னை இந்திரா காந்தி, ‘‘எனக்கு நல்லது செய்தவர்களைவிட, தீங்கு செய்தவர்கள்தான் அதிகம். ஆனால், என்னிடம் அவர்கள் திரும்ப வரும்போது யாரிடமும் எதுவும் சொல்லிக்காட்டாமல் அவர்களை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அவர்கள் மேல் கசப்புணர்வு தோன்றாமல் இருப்பதும்’’ என்றவர் அவர். கசப்புணர்வு அவருக்கு உண்மையிலேயே தோன்றாததால்தான் என்னவோ தெரியவில்லை... எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்டார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
‘‘எனக்குத் தீங்கு செய்தவர்கள்தான் அதிகம்!’’ இந்திரா காந்தி பிறந்த தினப் பகிர்வு!
TAGS :
COMMENTS