[ad_1]



காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தமிழக அரசு நியமித்துள்ளது.



2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 2015-ல் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்காணிக்க காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ராஜாராம் தலைமையில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்கினார்கள். ராஜாராம் மேற்பார்வையில் வாட்ஸ் அப் குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் தகவல் பரிமாற்றங்கள் செய்தனர். இதனால் ராணுவம் உள்ளிட்ட அதிரடி மீட்புப் படைகள் மூலம் மக்களை மீட்க முடிந்தது. அதிக அளவு பாதிக்கப்பட்ட முடிச்சூர், வரதராஜபுரம், மணிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா நியமிக்கப்பட்டார். அப்போது ஆக்கிரமிப்புகளை இடித்துதள்ளி அதிரடி காட்டினார் அமுதா.தற்போது பெய்து வரும் மழையின் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்கவும் பாதுகாக்கவும் தமிழக அரசு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தைக் கண்காணிக்க மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முனியநாதன் (தாம்பரம் மற்றும் பல்லாவரம்), சிவசண்முகராஜா (செங்கல்பட்ட மற்றும் திருக்கழுக்குன்றம்) சுப்பையன் (ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர்) ஆகியோர் அந்தப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.