[ad_1]
Chennai: வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டில் சசிகலாவின் அக்கா மகள் சீதளதேவி மற்றும் அவர் கணவர் எஸ்.ஆர்.பாஸ்கர் ஆகியோருக்கு சி.பி.ஐ நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
ரிசர்வ் வங்கியில் ரூபாய் நோட்டு ஆய்வாளராக இருந்த எஸ்.ஆர்.பாஸ்கரனின் ஆண்டு வருமானம் ரூ.2.81 லட்சமாக இருந்தநிலையில், அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.68 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ குற்றம்சாட்டியது. மேலும், அவருடைய வங்கி லாக்கர்களிலிருந்து 50 கிலோ எடைகொண்ட 80 தங்கக் கட்டிகள் இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ.43.69 லட்சம் என்றும் சி.பி.ஐ குற்றம்சாட்டியது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ நீதிமன்றம் கடந்த 2008-ல் தீர்ப்பை அறிவித்தது. அதில், எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.20 லட்சம் அபராதமும் அவர் மனைவி சீதளாதேவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து எஸ்.ஆர்.பாஸ்கரன் மற்றும் அவர் மனைவி சீதளாதேவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2008-ல் சி.பி.ஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரனுக்கு சிறைத்தண்டனை உறுதி!
TAGS :
COMMENTS