[ad_1]





Thoothukudi: தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற தேரிக்குடியிருப்பு – குதிரைமொழி கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர் வெட்டுத் திருவிழா, இன்று காலை தொடங்கியது.




தேரிமண் காட்டிலுள்ள பிரசித்திபெற்ற பூரணை, பொற்கமலை சமேத ஸ்ரீ கற்குவேல் அய்யனார் கோயிலில், கார்த்திகை மாதம் 30 நாள் நடைபெறும் கள்ளர் வெட்டுத் திருவிழா இன்று தொடங்கியது. தொடக்கவிழாவை முன்னிட்டு, அதிகாலையில் 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கற்குவேல் அய்யனார், இரு தேவியர்கள் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது. முதல் நாள் திருவிழாவை முன்னிட்டு, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இன்று முதல் 30 நாள்கள் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வில்லிசைமூலம் கற்குவேல் அய்யனார் பிறப்புக் கதை பாடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவுக்காக, பக்தர்கள் பலர் இன்று விரதம் மேற்கொண்டுள்ளனர்.



வரும் டிசம்பர் 14-ம் தேதி காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் ஐவராஜா சுவாமிக்கு மாக்காப்பு தீபாராதனையும் நடக்கிறது. 15-ம் தேதி  காலையில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளைத் தொடர்ந்து, இரவு 8 மணிக்கு உற்சவர் அய்யனார் திருவீதியுலா வருதல் நடக்கிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ’கள்ளர்வெட்டு நிகழ்ச்சி’ வரும் டிசம்பர் 16-ம் தேதி மாலை கோயிலுக்குப் பின்புறமுள்ள செம்மண் தேரிக்காட்டில் நடக்கிறது. ஐயனார், அநீதியை ஒழித்து நீதியை நிலைநாட்டிய நாளையே, கள்ளர் வெட்டுத் திருவிழாவாக பக்தர்கள் வழிபட்டுவருகின்றனர். அன்று காலை 10 மணிக்கு, 108 பால்குட அபிஷேகமும் தீர்த்தவாரி அபிஷேகமும், பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதலும் நடக்கிறது.


மாலை 3 மணிக்கு, கள்ளர் சுவாமிகள் ஓலைப்பெட்டிகளில் கடைவீதியில் பொருள்களைக் களவாடிக்கொண்டுவரும் ‘எடுப்பெடுத்தல் நிகழ்ச்சி’ நடக்கிறது. தொடர்ந்து, 4 மணிக்கு தேரிக்காட்டில் குவிக்கப்பட்ட மணல் மேட்டில் வைக்கப்பட்டுள்ள செவ்விளநீரை சாமியாடிகள் வெட்டும் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, கள்ளருக்கு தண்ணீர் தெளித்து விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் பக்தர்கள் புனிதமண் நிகழ்ச்சியும் நடக்கிறது. அடுத்த நாளான டிசம்பர் 17-ம் தேதி, மஞ்சள்நீராட்டு நிகழ்ச்சியுடன் நிறைவுபெறுகிறது கள்ளர் வெட்டு திருவிழா. இதற்கான ஏற்பாடுகளைத் திருக்கோயில் அறங்காவலர் குழுவினர் செய்துவருகின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");