[ad_1]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் பாலாற்றில் குளிக்க சென்ற இருவர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சிபுரம் குருவிமலை அருகே பாலாற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் அஜீத் என்பவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார். அப்பகுதியில் உள்ள பாலாற்றில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் மணல் அள்ளுகின்றனர். இதனால் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அது போல் விடுமுறை நாட்களில் இளைஞர்கள் குடித்துவிட்டு பாலாற்றில் குளிக்கிறார்கள். இதனாலும் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதுபோல் செங்கல்பட்டு அருகே படாளம் பகுதியில் 21 வயதுடைய அஜீத் என்பவர் பாலாற்று நீரில் சிக்கி உயிரிழந்தார். கடந்த மாதம் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் வந்தது. அப்போது பாலாற்றில் குளிக்க சென்ற இருவர் ஒரே நாளில் உயிரிழந்தனர். பாலாற்றில் குளிக்க செல்பவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கிறது. பாலாற்றில் மணல் அள்ளப்படுவதால், தேங்கும் நீரில் உள்ள சேற்றில் சிக்கி பலர் உயிரிழக்கிறார்கள்.
பாலாற்றில் குளிக்க சென்ற இருவர் பலி! தொடரும் காஞ்சிபுரம் சோகம்!
TAGS :
COMMENTS