[ad_1]
Chennai: பட்டினம்பாக்கம் அருகே வேகமாக வந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் தனியார் ஐ.டி நிறுவன கார் டிரைவர் மற்றும் பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
கேளம்பாக்கத்திலிருந்து ப்ராட்வே நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்த மாநகரப் பேருந்து எம்.ஆர்.சி நகர் அருகே வந்துகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்புறத்தில் வந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுசேரி நோக்கி சென்றுகொண்டிருந்த ஐ.டி நிறுவனத்தின் கார் டிரைவர் மணி என்பவருக்கு காலில் பலத்த அடிபட்டது. பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து நடந்தவுடன் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தைவிட்டு விட்டு ஓடிவிட்டார். ரோட்டின் ஓரத்திலிருந்த தனியார் இடத்தின் காம்பவுண்டு சுவரை இடித்து தோட்டத்திற்குள் நுழைந்தது.
இரவு நேரமாதலால் பெரிய அளவில் அசம்பாவிதமாகாமல் தவிர்க்கப்பட்டது. அதன்பின் போக்குவரத்து காவல் துறையினர் வேறு ஒரு ஓட்டுநரை வைத்து பேருந்தை சம்பவ இடத்திலிருந்து ஓட்டிச் சென்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பட்டினப்பாக்கத்தில் கட்டுபாட்டை இழந்த அரசு பேருந்து விபத்துக்குள்ளானது
TAGS :
COMMENTS