[ad_1]
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், 'எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்' என்று பெயர் மாறினாலும், பேருந்துகளில் தற்போது தொடர்ந்து குழப்பம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுரையின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமான மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், தமிழக முதல்வரின் அறிவிப்பிற்குப் பின், கடந்த சில நாட்களுக்கு முன்பாக எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது .
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக மதுரை நகர்ப்புற மற்றும் புறநகர்ப்புற பேருந்துகள் சிலவற்றில் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என டிஜிட்டல் பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது. இருந்தபோதும், அனைத்துப் பேருந்துகளுக்கும் பெயர் மாற்றத்தை உடனடியாக அமல்படுத்தாத காரணத்தால், இப்போதும் பழைய பெயரான மாட்டுத்தாவணி என்ற பெயரே பேருந்துகளில் தெரிகின்றன . இதனால் பயணிகளுக்கு இரண்டும் வேவ்வெறு பேருந்து நிலையங்களோ என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "பெயர் மாற்றத்தை இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தொடங்கினோம். ஒரு சில நாள்களுக்குள் அனைத்துப் பேருந்துகளுக்கும் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்" என மாற்றிவிடுவோம் எனத் தெரிவித்தனர் .
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஒரு பஸ் நிலையத்துக்கு இரண்டு பெயர்களா? குழப்பத்தில் மதுரை மக்கள்!
TAGS :
COMMENTS