[ad_1]
தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பிரத்யேக புகார் பெட்டி தர்மபுரி நகரத்தில் அமைந்துள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத்திலேயே முதல்முறையாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார்பெட்டி குறித்து, தருமபுரி நகர அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருஷ்ணவேணி பள்ளி மாணவிகளிடம் பேசுகையில். `பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு மற்றவா்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை இந்த புகார் பெட்டியில் மனுவாக எழுதி போடலாம். புகாரில் மாணவியின் பெயா் எழுத வேண்டிய அவசியமில்லை. அவர் படிக்கும் வகுப்பு மற்றும் யார் மீது புகார் அவரின் பெயா் மற்றும் முகவரி எழுதினால் போதுமானது.
புகார்கள் தெரிவிப்பவா் பெயர் குறிப்பிடாத காரணத்தால் மாணவிகள் பயமின்றித் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீா்த்துகொள்ள இந்தப் புகார் பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் படிக்க வரும் பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் சிண்டல்கள், இவ்டீசிங் போன்ற குற்றசம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். அதேபோல மாணவிகளிடம் தவறான எண்ணத்துடன் பழகும் ஆசிரியா்களிடமிருந்து காத்துகொள்ள முடியும். பள்ளிக்கு வெளியே ஏற்படும் பிரச்னைகளில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இது மட்டும் இன்றிப் பெற்றோர்கள் மூலம் படிப்புக்குப் பிரச்னை ஏற்பட்டாலே, தந்தை குடித்துவிட்டு படிக்க முடியாமல் செய்தாலே அல்லது குழந்தை திருமணம் உள்ளிட்ட பிரச்னைகள் பற்றி மாணவிகள் புகார் தெரிவிக்கலாம்' என்று பேசினார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தர்மபுரி பள்ளியில் மாணவிகளுக்குப் புகார் பெட்டி தொடங்கிவைத்தது போலீஸ்!
TAGS :
COMMENTS