[ad_1]

குஜராத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் மாதம் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதையொட்டி, பா.ஜ.க-வின் தலைவர் அமித்ஷா, `குடும்ப ஆட்சியோ சாதியமோ குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற உதவாது. அதனால் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பில்லை' என்று கருத்துக் கூறியுள்ளார்.



இது குறித்து அவர் மேலும், `குடும்ப ஆட்சியோ சாதியமோ குஜராத்தில் மாநில சட்டமன்றத் தேர்தலில் வேலைக்கு ஆகாது. பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கான பிரசாரம்தான் அங்கு எடுபடும். சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். 150 தொகுதிகளைக் கைப்பற்றி தேர்தலில் இதுவரை கிடைக்காத வெற்றியைப் பெறுவோம்' என்று தெரிவித்துள்ளார்.