[ad_1]
ராமேஸ்வரம் மீனவர்கள்மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டு இந்தியக் கடலோரக் காவல்படையில் பயன்படுத்தக்கூடியதுதான் என மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் தெரிவித்ததாக நேற்று செய்திகள் வெளியானது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து இந்தியக் கடலோரக் காவல்படை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக மீனவர்கள் புகார் கூறியிருந்தனர். மீனவர்களது படகில் சிதறிக் கிடந்த துப்பாக்கிக் குண்டு ஒன்றையும் கண்டெடுத்துவந்தனர். மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட குண்டு இந்தியக் கடற்படையில் பயன்படுத்துவது இல்லை என மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.நேற்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தங்கச்சிமடத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க வந்திருந்த மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மீனவர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம்குறித்து எனக்கு ஏதும் தெரியாது. ஏனெனில், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தது சென்னைக் கடலோரக் காவல் படை நிலையத்திலிருந்து வந்த கப்பலாகும். ஆனால், மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட 0.22 மி.மி அளவுகொண்ட துப்பாக்கிக் குண்டு இந்தியக் கடலோரக் காவல்படையில் பயன்படுத்தக்கூடியதுதான்’ என்று பேசினார். இதுகுறித்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கமாண்டர் பேசியது வேறு, ஆனால் செய்தியாக்கப்பட்டது வேறு என்று கடலோரக் காவல் படை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
கடலோரக் காவல்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் ‘மீனவர்கள்மீது கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏதும் நடத்தவில்லை என்று முன்னரே தெளிவாக சொல்லிவிட்டோம். ஆனால், ஊடகங்கள் பாதுகாப்பு அமைச்சர்மீது அவதூறு பரப்பும் நோக்கில் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றன. இதற்கு கடலோரக் காவல்படை கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்கிறது” என்று குறிப்பிட்டு ஊடகச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
”கமாண்டர் ராமாராவ்வின் நேரடி பேட்டியை தான் செய்தியாக்கினோம். அவர் பேசியதைதான் பதிவு செய்தோம்” என்று செய்தியாளர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தமிழக மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு! இந்திய கடலோரப் படை மீண்டும் விளக்கம்
TAGS :
COMMENTS