[ad_1]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்துக்குத் தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உடல்நிலை பாதிப்பால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்தார். சிகிச்சையின்போது சசிகலா மட்டுமே உடனிருந்தார். ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. இதனிடையே, சசிகலாவின் தலைமை பிடிக்காமல் ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து தனி அணியாக சென்றார். அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும் இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரனும் சிறைக்குச் சென்றனர்.
இந்தச் சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி, முதல்வர் பழனிசாமி அணியுடன் இணைந்தது. துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றைத் தமிழக அரசு அமைத்தது. இந்த ஆணையம் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதனிடையே, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்குத் தடை விதிக்கக்கோரி ஜோசப் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆணையத்துக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி!
TAGS :
COMMENTS