[ad_1]

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி பொறியாளர் ரவீந்திரன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




சிவகாசி நகராட்சிக்குட்பட்ட 2, 6, 26ஆகிய வார்டுகளில் ஆழ்துளை கிணறு அமைக்க, சிவகாசி நேருஜி நகரைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவா் ஒப்பந்தம் செய்துள்ளார். மூன்று வார்டுகளில் ஆறு லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டன. அவருடைய பில்லை பாஸ் செய்வதற்கு மொத்த தொகையில் ஆறு சதவிகிதம் கமிஷனாக கேட்டுள்ளார் பொறியாளர் ரவீந்திரன். லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிச்சாமி 25 ஆயிரம் தருகிறேன் என்று சொல்லி பேரம் பேசியுள்ளார். அதற்கு படிந்துவிட்ட பொறியாளர் ரவீந்திரன், காரணேசன் முக்கு அருகேயுள்ள பொறியாளா் குடிருப்புக்கு வந்து பணத்தைக் கொடுக்க சொல்லியுள்ளார்.  இதைப்பற்றி  விருதுநகர்  லஞ்ச ஒழிப்பு போலீஸிடம் புகார்  செய்தார் பழனிச்சாமி. லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஸ்ரீனிவாசப்பெருமாள் தலைமையில் ஒப்பந்தகாரா் பழனிச்சாமியிடம் ராசயனம் தடவிய ரூபாய் நோட்டையை கொடுத்துவிட்டுள்ளனா். இதை பொறியாளா் ரவீந்திரன் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார்  கைது செய்துள்ளனா். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.


 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");