[ad_1]
”எங்களை மிரட்டி அடிபணியவைக்கவே இந்த வருமான வரிச்சோதனை நடந்துள்ளது” என திவாகரன் பேட்டியளித்துள்ளார்.
கோவைக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வு, தமிழகத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, 'ஆளுநரின் செயல்பாடு மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது' என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவருகின்றன.
ஆனால், ஆளுநரின் செயல்பாட்டில் தவறில்லை. இது, ஆரோக்கியமான ஒன்றுதான் என அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், திவாகரன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்தியுள்ளார். இதை, தமிழக அமைச்சர்களும் வரவேற்றுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவிலேயே மிகப்பெரிய வருமான வரிச்சோதனை எங்கள் குடும்பத்தில்தான் நடந்தது. எங்களை மிரட்டி அடிபணியவைக்கவே இந்த வருமான வரிச்சோதனை நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் வருவது எல்லாம் பொய்” எனக் கூறினார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
"எங்களை மிரட்டி அடிபணியவைக்கவே இந்த ரெய்டு”: திவாகரன்
TAGS :
COMMENTS