[ad_1]
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் வேலை வாங்கித் தருவதாக அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒரு பெண் 11 லட்சம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதையடுத்து, பணம் கொடுத்தவர் அந்த பெண் வீட்டின் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி அங்கிருப்பவர்களிடம் விசாரித்தபோது, ''நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் தங்கராஜ் வயது 50. பொறியியல் பட்டம் பெற்ற தன்னுடய அண்ணன் மகனுக்கு மத்திய அரசில் கப்பல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, அதே ஓடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பெண் பிரமுகர் கல்யாணி என்பவர் கூறியிருக்கிறார்.
அதற்கு 11 லட்சம் கொடுக்க வேண்டும். பணம் கொடுத்ததும் அடுத்த நாளே மத்திய அரசில் வேலை உறுதி என்று கூறியதையடுத்து தங்கராஜ் 11 லட்சத்தை கல்யாணியிடம் கொடுத்திருக்கிறார். பணம் கொடுத்து 8 மாதம் ஆகியும் தன்னுடைய அண்ணன் மகனுக்கு வேலை கிடைக்கவில்லை. அதையடுத்து, தங்கராஜ் கடந்த 2 மாதமாக பணத்தை திருப்பித் தரும்படி கேட்டிருக்கிறார்.
கல்யாணி திருப்பித் தருவதாக கூறி காலதாமதம் செய்துவந்துள்ளார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு கல்யாணிக்கும், தங்கராஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கல்யாணி பணத்தை திருப்பித் தர முடியாது நீ செய்வதைச் செய் என்று கூறியிருக்கிறார். அதையடுத்து, இன்று கல்யாணி வீட்டின் முன்பு தங்கராஜ் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதையடுத்து, காவல்துறையினர் தங்கராஜை மீட்டு ஈரோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
வேலை வாங்கித் தருவதாக அ.தி.மு.க பெண் பிரமுகர் மோசடி..! - தீக்குளித்த முதியவர்
TAGS :
COMMENTS