[ad_1]





'உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க தயாராக இருக்கிறது' என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 




மேலும், `உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலையும் கண்டு அ.தி.மு.க அஞ்சவே அஞ்சாது. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். சென்னையில், மழையால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமான சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதேபோல, பருவமழை தீவிரமடைந்து வரும் வேளையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `மழை வெள்ளத்திற்கு தமிழக அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கையால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை. மழை நீர் தேங்குவதால் ஏற்படும் டெங்கு காய்ச்சல்  பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது' என்று கூறியுள்ளார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்