[ad_1]





’தி.மு.க உடன் பா.ஜ.க கூட்டணி வராது’ என சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.




சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் நேற்று அதிகாலை 4 மணியிலிருந்து இரண்டாம் நாளான இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்கள் எனக் கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை இன்னும் நடந்து வருகிறது. இது தவிர ஹைதராபாத், பெங்களூர், டெல்லி என 82 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுகிறது.


இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “’தி.மு.க உடன் பா.ஜ.க கூட்டணி வராது. வருமான வரித்துறையின் சோதனை ஒருதலைப்பட்சமாக நடந்தால் பல சந்தேகங்கள் வரும். இதுகுறித்து நான் டில்லியில் சென்று விசாரிப்பேன். எங்கு, எந்த விதத்தில் ஊழல் நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்