[ad_1]
தமிழகத்தில், கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது வட கிழக்குப் பருவமழை. இதனால், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரியின் முழுக் கொள்ளளவை மழைநீர் எட்டியுள்ளது.
மதுராந்தகம் ஏரி, அதன் முழுக் கொள்ளளவான 23.3 அடியை எட்டியுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. தற்போது, ஏரிக்கு 200 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால், 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்துவருவதால், உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏரி நிரம்பியதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் அச்சமடையத் தேவையில்லை என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தொடர் மழை காரணமாக நிரம்பியது மதுராந்தகம் ஏரி..!
TAGS :
COMMENTS