[ad_1]
டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் வெளியேற முடியாமல் பயிர்கள் அழுகும் அபாயத்தில் இருக்கின்றன. இதனால் விவசாயிகள் நொந்து கிடக்கின்றனர். ஆனால், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உணவு பொருள்கள் 3 மாதங்களுக்குக் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதென்று மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதியில் தொடந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், மழைநீர் வெளியேறமுடியாமல் தேங்கிக்கிடக்கிறது. இதனால், பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் இருக்கிறார்கள்.
இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் மற்றும் கொரடாச்சேரி பகுதிகளை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். அப்போது மழைநீர் வெளியேற முடியாமல் பயிர்கள் மூழ்கிய நிலையில் உள்ள இடங்களைப் பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வயல்வெளிகளிலிருந்து மழைநீரை வெளியேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மழை பாதிப்பினை தடுப்பதற்கு பேரிடர் மீட்புப்பணிகளைத் தயார்நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழ்நாட்டில் மழை நேரத்தில் உணவு பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடப்பதற்கு 3 மாதங்களுக்குத் தேவையான உணவு பொருள்கள் அங்காடியில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
’மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கையிருப்பு உள்ளது’ - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
TAGS :
COMMENTS