[ad_1]

Chennai: நிலக்கடலை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.





முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்குக் கரை வாய்க்கால்களிலிருந்து, எள் மற்றும் நிலக்கடலை சாகுபடிக்காக முதல் கட்டமாகத் தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 17.11.2017 முதல் 13 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதைத் தவிர, மேலும் மூன்று கட்டங்களாகவும் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், மேட்டூர் அணையின் கிழக்குக் கரை வாய்க்கால் பாசனப் பகுதியில் 27,000 ஏக்கர் நிலங்களும் மேற்குக் கரை வாய்க்கால் பாசனப் பகுதியில் 18,000 ஏக்கர் நிலங்களும் என ஆக மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");