[ad_1]





புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்ததால் ரவுடியின் கைவிரல்கள் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




புதுச்சேரியில் ரவுடிகள் மத்தியில் சமீப காலமாக நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் வேரூன்றியிருக்கிறது. சமீபத்தில் தீபாவளி அன்று இரவு மேட்டுப்பாளையத்தில் மது அருந்திக் கொண்டிருந்த போது மூன்று பேர் கொடூரமாக நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.  புதுச்சேரி வாழைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ‘எலி’ கார்த்திக். இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் வெடிகுண்டுகள் வீசியது உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வாழைக்குளம் பகுதியில் எதிரிகளால் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால் பிள்ளைச்சாவடி பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது மனைவி குழந்தைகளுடன் வாடகைக்குக் குடியேறினார்.




இன்று தனது வீட்டின் பின்புறம் அமர்ந்து பாஸ்பரஸ் வெடிமருந்து, ஆணிகள், சைக்கிள் சக்கரத்தில் இருக்கும் பால்ரஸ், சிறிய சிறிய கற்கள் போன்றவைகளை வைத்து நாட்டு வெடிகுண்டைத் தயாரித்துக் கொண்டிருந்தார். இவை அனைத்தையும் துணியால் சுற்றி இறுக்கிக் கட்டியபோது ஏற்பட்ட அழுத்தத்தால் நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதோடு எலி கார்த்திக்கின் கைகளில் இருந்த 10 விரல்களும் சிதறித் தொங்கின. அங்கு போடப்பட்டிருந்த சிமென்ட் கூரையும் உடைந்து நொறுங்கியது. சமையல் சிலிண்டர்தான் வெடித்துவிட்டது என்று நினைத்து அருகே இருந்த வீட்டினர் சென்று பார்த்த போதுதான் நாட்டு வெடிகுண்டு செய்தபோது ஏற்பட்ட விபத்து என்று தெரிய வந்தது. அதையடுத்து உடனே அவரை காலாப்பட்டில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தீபாவளியன்று மேட்டுப்பாளையத்தில் நிகழ்த்தப்பட்ட 3 பேர் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக வெடிகுண்டு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் ஆரோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");