[ad_1]
Thanjavur:
டிரான்ஸ்ஃபார்மரில் ஏதேனும் கோளாறு இருந்தாலோ, மிகவும் பழைய கம்பியாக இருந்தாலோ, அது அறுந்து தரையில் விழுந்த பிறகும் மின்சாரம் பாயக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கனமழை காலங்களில் தரையில் அறுந்து கிடக்கும் மின்சாரக் கம்பிகளால் அதிகளவில் உயிரிழப்புகள் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால், அதேசமயம் வெளியில் சென்றால் மின்சார கம்பிகளால் ஆபத்து நேரக்கூடும் என்ற அச்சத்தினாலும் எச்சரிக்கையுடனும் மக்கள் சற்று கவனமாகவே இருந்தார்கள். காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, மின்சாரத் துறையும் நவீனமயமானது. மின்சாரக் கம்பிகள் அறுந்து, தரையில் விழுந்தால், உடனடியாக தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வசதி உருவாக்கப்பட்டது. இதனால் கனமழை காலங்களில் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கினார்கள். அறுந்து கிடந்தாலும் மின்சாரக் கம்பிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என்ற எண்ணம் தற்பொழுது அதிகமாகியுள்ளது.
இது தவறான பார்வை. அறுந்து கிடக்கும் மின்சாரக் கம்பிகளால் எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து நேரக்கூடும். இதை உணர்த்தும் விதமாக, அறுந்து கிடந்த மின்சார கம்பியினால் உயிரிழப்பு என்ற செய்தி தற்பொழுது அதிகமாகியுள்ளது. இதுகுறித்து மின்சாரத் துறைப் பொறியாளர் ஒருவரிடம் பேசியபோது, ‘குறைந்த மின் அழுத்த மின் கம்பி தரையில் விழுந்தால் உடனடியாக டிரான்ஸ்ஃபார்மரில் பீஸ் போயிடும். ஆனால், டிரான்ஸ்ஃபார்மரில் ஏதேனும் கோளாறு இருந்தாலோ, மிகவும் பழைய கம்பியாக இருந்தாலோ, அது அறுந்து தரையில் விழுந்த பிறகும் மின்சாரம் பாயக்கூடிய வாய்ப்பு இருக்கு. உயர் மின்னழுத்தக் கம்பிகள் அறுந்தால் பவர்ஹவுஸ்ல மின்சாரம் துண்டிக்கப்படும். மின்கம்பி அறுப்பட்ட இடத்துக்கும் பவர்ஹவுஸ்சுக்குமான தூரம் அதிகமாக இருந்தால் சில நொடிகள் கழித்துதான் மின்சாரம் துண்டிக்கப்படும். இந்த நேரத்துல தான் யாராவது எதிர்பாராத விதமாக தரையில் கிடக்கும் மின்கம்பியை மிதிச்சி, இறந்து போறாங்க” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
அறுந்து கிடக்கும் மின் கம்பியிலும் மின்சாரம் பாயக்கூடும்! எச்சரிக்கும் மின்வாரியம்
TAGS :
COMMENTS