[ad_1]
Cuddalore: சினிமாவையே விஞ்சும் அளவுக்கு கார்சேஸிங் செய்து, சாராயம் கடத்திய கார் ஒன்றை துரத்திப்பிடித்த மதுவிலக்குப் பிரிவு பெண் இன்ஸ்பெக்டருக்கு காவல்துறை மத்தியில் பாராட்டுகள் குவிந்துவருகிறது.
இன்று அதிகாலை, கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தலைமையில், போலீஸார் வாகனச் சோதனை நடத்தினார்கள். அப்போது, புதுவையிலிருந்து வந்த குவாலிஸ் கார் ஒன்று, நிற்காமல் அதிவேகமாக செக்போஸ்ட்டைக் கடந்துசென்றது. அதனால் சந்தேகமடைந்த இன்ஸ்பெக்டர், தன்னுடைய போலீஸ் வாகனத்தில் அந்த காரை பின்தொடர்ந்து வேகமாகச் சென்றார். அந்த கார், ஒரு மணிநேரமாக கடலூர் நகரம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தை சுற்றிச்சுற்றி வந்தது. இதனால், அதிகாலையில் வாக்கிங் செல்லும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் பீதியடைந்தனர்.பின்னர் அந்த கார், போலீஸ் துரத்தலில் இருந்து தப்பிக்க, புதுப்பாளையம் வழியாக கெடிலம் ஆற்றைக் கடக்க முயன்றபோது, வேறு வழியில்லாமல் தண்ணீரில் சிக்கிக்கொண்டது. அந்த காரை பின்தொடர்ந்து சென்ற இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை, கார் ஓட்டுநரைக் கைது செய்து, புதுநகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தார். அப்போது, அந்த காரை ஓட்டிவந்தவர் காரைக்கால் பூவம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பதும், அந்த காரில் 500 லிட்டர் எரிசாராயம் இருப்பதும் தெரியவந்தது. அதைப் பறிமுதல்செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். பின்னர், தண்ணீரில் சிக்கிய அந்த காரை, ஜேசிபி இயந்திரத்தின்மூலம் மீட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால், காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகைக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சினிமாவை விஞ்சிய கார் சேஸிங்! - சாராயக் கடத்தலைத் துரத்திப்பிடித்த பெண் இன்ஸ்பெக்டர்
TAGS :
COMMENTS