[ad_1]





ஹாலிவுட் நடிகை ஹாலே பெரி, சத்தமில்லாமல் கேரளா, மும்பை ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.





ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை, ஹாலே பெரி (வயது 51). `மான்ஸ்டர்ஸ் பால்' என்ற திரைப்படத்துக்காக 2002-ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றவர். இவர், 5 பேர் கொண்ட தன் நண்பர்கள் குழுவுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தகவல் இப்போது வெளியாகியுள்ளது. கடந்த 8-ம் தேதி, கேரள மாநிலம் ஆலப்புழாவுக்குச் சென்றுள்ளார். அங்கு, கடற்கரையில் உலாவியதோடு, ஆயுர்வேத மசாஜ் எடுத்துக்கொண்டார். ஆலப்புழாவில் உள்ள முக்கிய கலாசார இடங்களைப் பார்வையிட்டார். அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. பின்னர், மும்பை சென்று இரு தினங்களைச் செலவிட்டுள்ளார். நேற்று காலை, அவரும் அவருடன் வந்தவர்களும் மும்பையிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச்சென்றனர். இந்தியப் பயணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, ஹாலே பெரி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");