[ad_1]

வருகின்ற ஜனவரி 6-ம் தேதி மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதற்கான பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது என இந்த வருட தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் பொருளாளர் கார்த்தி தெரிவித்திருந்தார். 

மலேசியாவில் அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் சங்க நிர்வாகிகள், 'வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவில் இசை, நடனம், நகைச்சுவை என பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட நூறுக்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்துகொள்ள உள்ளனர். பிறகு, சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, ஜீவா ஆகியோர் தலைமையில் அணிகளாக பிரிக்கப்பட்டு நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. மேலும், இவ்விழாவில் மலேசிய நடிகர்களுக்கும் தமிழ் சினிமா நடிகர்களுக்கும் இடையே கால்பந்து போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி முழுவதும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அவர்களின் தலைமையோடு ஒத்துழைப்புடன் நடைபெற இருக்கிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.