[ad_1]

அரைக் காசுக்குக்கூட பயனற்ற விழாவுக்காக அரசுக் கல்லூரியின் விளையாட்டுத் திடலை சீரழிப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 




எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக சரபோஜி கல்லூரியின் விளையாட்டுத் திடல் சேதப்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், 'தஞ்சாவூரில் வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான வாகன நிறுத்தம் அமைப்பதற்காக அங்குள்ள மன்னர் சரபோஜிக் கல்லூரியின் விளையாட்டுத் திடல் சீரழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்களின் புகழ் பாடுவதற்காக நடத்தப்படவிருக்கும் அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழாவுக்காக அரசுக் கல்லூரியின் விளையாட்டுத் திடலை சீரழிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் பழைமையான, பெருமைமிக்க கல்லூரிகளில் சரபோஜி கல்லூரியும் ஒன்றாகும். அதன் விளையாட்டுத் திடல் மிகவும் பெரியது என்பதால் அதில் அனைத்து வகையான விளையாட்டுகளையும் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் அந்த விளையாட்டுத் திடலைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டிருக்கின்றன. 

விளையாட்டுத் திடலில் குறுக்கும் நெடுக்குமாக சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிமிட்டி கலந்த கிராவல் மண் கொட்டப்பட்டு அதன் பெரும்பகுதி கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முடிந்த பின்னர், லட்சக்கணக்கில் செலவு செய்தாலும்கூட மன்னர் சரபோஜி கல்லூரியின் விளையாட்டுத் திடலை அதன் பழைய பொலிவுக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது. விளையாடுத்திடல் சேதப்படுத்தப்படுவதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினாலும், அதைக் கண்டு கொள்ளாமல் திடலில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதற்கு முன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த வாகனங்களை நிறுத்துவதற்காக இதே விளையாட்டுத் திடலை ஒட்டியிருந்த சுற்றுச் சுவர் 3 இடங்களில் இடிக்கப்பட்டது. அப்போது வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் சேதமடைந்த விளையாட்டுத் திடல் நீண்டகாலமாகச் சீரமைக்கப்படாமல் கிடந்து, ஒரு கட்டத்தில் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களும் இணைந்து சீரமைத்தனர். இப்போது அதைவிட பலமடங்கு மோசமாக விளையாட்டுத் திடல் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சொந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் கல்வி நிறுவனங்களைச் சேதப்படுத்துவதை வாடிக்கையாகக்கொண்டிருக்கின்றனர். இது மன்னிக்கவே முடியாத குற்றமாகும்.

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 23 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இவ்விழாக்களால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. மாறாக, ஏராளமான பாதிப்புகள்தான் ஏற்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற விழாக்களுக்கு பள்ளி மாணவர்கள் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்ட போதிலும், அதை மதிக்காத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த மாவட்டமான சேலத்திலேயே ஆயிரக்கணக்கான மாணவர்களை அழைத்து வரச் செய்தார். பள்ளி நிர்வாகங்களை மிரட்டி அவற்றின் வாகனங்களைக் கட்டாயப்படுத்தி வாங்கி, பொதுமக்களை அழைத்து வரப் பயன்படுத்தினார்கள். உயிருடன் உள்ள தலைவர்களின் படத்துடன் கட் அவுட்டுகள், பதாகைகள் வைக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை மீறி திருச்சி மாநாட்டுக்காக ஆயிரக்கணக்கான கட் அவுட்டுகள் வைக்கப்பட்டன.  

இப்படி சட்டத்தையும் மதிக்காமல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் மதிக்காமல் எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு செயல்படுவது, அந்த அரசு அழிவை நோக்கிச் செல்வதையே காட்டுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களை மதிக்காமல் கல்லூரிகளின் விளையாட்டுத் திடல்களை சீரழிப்பது, மாணவர்களைக் கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது. எனவே, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காகச் சீரழிக்கப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி விளையாட்டுத் திடலை உடனடியாகச் சீரமைத்துத் தர வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்ய வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார். 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");