[ad_1]
Chennai: கடலோர தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் இன்னும் மூன்று தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குனர் ஸ்டெல்லா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ''தென் இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை சற்று பலவீனம் அடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக அரபிக்கடல் பகுதியில் உள்ளது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் ஒட்டியுள்ள இலங்கை பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. அதனால், பாண்டிச்சேரி மற்றும் கடலோர தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வின் நகர்வை பொறுத்து மழையின் தாக்கத்தில் மாறுதல் இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்'' என்றார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சென்னையில் மழைக்கு வாய்ப்பு! அடுத்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ரெடி
TAGS :
COMMENTS