[ad_1]
மத்திய நிதி அமைச்சகம், கடந்த 24-ம் தேதி இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்காக வங்கித்துறையில் சில முக்கிய திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தது. ‘பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனமாக்கம்’ என்ற திட்டம், நாட்டில் உள்ள வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகளுக்கான மறு மூலதனமாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ரூ.2,10,000 கோடி வழங்கப்படும் என்றும் இந்த மொத்தத் தொகையில் ரூ.1,35,000 கோடி வங்கி மறுமுதலீட்டுப் பத்திரங்கள் வாயிலாகவும், ரூ.18,000 கோடி நேரடியாக மத்திய பட்ஜெட் மூலமாகவும், ரூ.58,000 கோடி பங்குச் சந்தையிலிருந்து திரட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஒதுக்கீடுகள் மூலமாக, ‘நாட்டின் பொதுத்துறை வங்கிகள் பலமாக உயரும். கடன் வளர்ச்சி விகிதம் உயரும். இவை அனைத்தின் மூலம், சிறு குறு தொழில்களின் வளர்ச்சி வேகமெடுக்கும்’ என்பதே மத்திய நிதி அமைச்சரின் ‘புராஜெக்ட் அப்ஜெக்டிவ்’. ஆனால், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனாக சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் இன்றைய சூழலில், இந்த மேம்பாட்டுத் திட்டம் பொதுத்துறை வங்கிகளைக் காக்குமா என்பதே தற்போதைய பெரும் கேள்வி.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்கச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறுகையில், ”மறு மூலதனமாக்கம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை. பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் சுமை பல லட்சம் கோடிகளாக உள்ள நிலையில், இந்தக் கடன் தொகைக்கான ஒதுக்கீட்டை, வங்கிகள் தமது லாபம் அல்லது மூலதனத்திலிருந்துதான் வழங்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக லாபம் குறைந்துகொண்டே வரும் நிலையில், வங்கிகளின் மூலதன அளவும் குறைந்துகொண்டே வந்தது. எனவே, பொதுத்துறை வங்கிகளால் முக்கியத் திட்டங்களுக்கான கடன் தொகையை வழங்க முடியவில்லை. அதற்காக ‘மறுமூலதனமாக்கம்’ திட்டம் என்று அறிமுகப்படுத்தப்பட்டாலும், மத்திய அரசு சொல்வதுபோல மூலதனத்தை அளிப்பது கடினம். வாராக்கடன்களை வசூலித்தால் மட்டுமே பொதுத்துறை வங்கிகளைக் காக்க முடியும் என்ற நிலையில், அரசு அறிவித்திருக்கும் மறு மூலதனமாக்கல் திட்டம் ஒரு நாளும் பொதுத்துறை வங்கிகளைக் காக்காது. இந்த அரசின் திட்டம், மெதுவாக தனியாரின் கைகளை உயரவைப்பதாகவே உள்ளது” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
‘இனி வங்கிகளைக் காப்பாற்ற முடியாது’- குமுறும் ஊழியர் சங்கங்கள்
TAGS :
COMMENTS