[ad_1]





213 பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.




ஜி.எஸ்.டி (GST) கவுன்சிலின் 23-வது கூட்டம், அஸ்ஸாம் தலைநகர் கெளகாத்தியில் சமீபத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், அதிகபட்சமாக 28 சதவிகித வரி விதிப்புக்கு உள்ளான 227 பொருள்களில், 213 பொருள்களின் வரியைக் குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது. 

தினசரி வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களான ஷாம்பூ, பற்பசை, ஷேவிங் கிரீம், ஆஃப்டர் ஷேவிங் லோஷன், தின்பண்டங்களான சாக்லேட், சூயிங்கம் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட 28 சதவிகித வரியானது, 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது, 50 பொருள்கள் மட்டுமே அதிகபட்ச வரி விதிப்பில் தொடர்கின்றன. 

மாதந்தோறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்தான் என்றாலும், வரும் டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இம்முறை அதிரடியாக, 213 பொருள்களின் வரி குறைக்கப்பட்டிருப்பது  அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் உள்ள உணவகங்களுக்கு ஒரே சீராக 5 சதவிகித வரி விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதேநேரம், உணவகங்கள் உள்ளீட்டு வரி விதிப்பு சலுகைகளைப் பெற முடியாது. அதேபோல, நாள் வாடகை ரூ.7,500-க்குக்  குறைவாக உள்ள விடுதிகளுக்கான வரி 18 சதவிகிதமாகிறது. 


இந்த புதிய மாறுதலுக்கு உள்ளான வரிவிதிப்பு முறை, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");