[ad_1]
கோவையில், சில நாள்களுக்கு முன்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடத்திய ஆய்வுகுறித்து ராஜ் பவன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், `கோயம்புத்தூரில், மாவட்ட அதிகாரிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சமீபத்தில் சந்தித்தது அரசியல் கட்சிகளிடையேயும் பத்திரிகைகளிலும் பெரும் கவனம்பெற்றது. இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம், அரசின் பல்வேறு மக்கள்நலத் திட்டங்கள் அமல்படுத்துவது குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆளுநர் நேரடியாகத் தெரிந்துகொள்ளவதே ஆகும். இந்த நடவடிக்கையைச் சிலர் வரவேற்றனர். ஒரு தரப்பினர், ஆளுநரின் நடவடிக்கை அரசியல் சட்ட சாசனத்துக்கு உட்பட்டதில்லை என்றும் கூறினர். இந்த நடவடிக்கையை எதிர்த்தவர்கள், ஆளுநர் வரம்புமீறிச் செயல்படுகிறார் என்றும் கருதினர்.
துரதிர்ஷ்டவசமாக, சிலர் ஆளுநருக்கு அரசியல் அஜென்டா இருந்ததாகவும், அவர் மத்திய அரசுக்காக இப்படி நடந்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கருத்து மிகவும் தவறு. ஆளுநர் வரம்பு மீறிச் செயல்பட்டார் என்று கூறப்பட்ட கருத்துக்கு, பன்வாரிலால் புரோஹித் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றபோதே, சட்ட சாசனத்துக்கு உட்பட்டுதான் நடப்பார் என்று உறுதியெடுத்துக்கொண்டார் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். மேலும், ஆளுநரின் நடவடிக்கைகள் இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுதுதான் இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தார். ஆளுநர் சிறியதாகவோ பெரியாதாகவோ எடுக்கும் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கீடு இருக்காது. அதேபோல, ஆளுநர் எடுக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசுக்கு முழு ஆதரவு கொடுக்கப்படும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மேலும் நிதி கிடைக்க ஆளுநர் பாடுபடுவார்.
கோவையில் நடத்திய ஆய்வில், சட்டபூர்வமாக அனைத்தும் சரியே என்பது ஆளுநருக்குத் தெரியும் என்றாலும், சட்ட நிபுணர்மூலம் அவரது நடவடிக்கைகுறித்து யோசனை பெற்றார். அதைவைத்து, கோவையில் நடத்திய ஆய்வில் ஆளுநரின் சட்ட சாசன நடைமுறையும் விதிமீறலும் இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும். சந்திப்பின்மூலம் கோவை மாவட்டத்தில் மக்கள்நல வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுகுறித்து ஆளுநர் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிந்தது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், `ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இதற்கு முன்னர் அசாம் மாநிலத்தில் கவர்னராக இருந்தபோது, இதைப்போன்றே சந்திப்புகள் நடத்தியுள்ளார். இந்த நடவடிக்கையை தமிழகத்தின் அமைச்சர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இதைப்போன்ற சந்திப்புகளை ஆளுநர் தொடர்ந்து நடத்துவார். இது, மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவது அல்ல. மாறாக, நல்ல ஆட்சி முறையை கொடுப்பதற்கான நடவடிக்கையே' என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`எந்த விதிமீறலும் இல்லை!' - ஆளுநரின் கோவை ஆய்வுகுறித்து ராஜ் பவன் விளக்கம்!
TAGS :
COMMENTS