[ad_1]





பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் 2017 பிப்ரவரி 14-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை சென்ற சசிகலா மற்றும் இளவரசியை உறவினர்கள், கட்சி முக்கியப் பிரமுகர்கள் சந்தித்துப் பேசிவந்தனர். ஆனால்,ஜெ-யின் வளர்ப்புமகன் சுதாகரனை சந்திக்கும் விவரங்கள் அதிகமாக வெளியே கசியவில்லை. அதேபோல, அவரது மனைவி சத்தியலட்சுமிகூட சுதாகரனை சந்திக்காமலேயே இருந்துவந்தார். 





நேற்று (8-ம் தேதி), சசிகலாவை சந்திக்க தினகரன், விவேக், அவரது மனைவி கீர்த்தனா, குடியாத்தம் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன்,  மாதேவா, முன்னாள் எம்.எல்.ஏ ஸ்ரீபெரும்புதூர் பெருமாள், வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் வந்திருந்தனர். இவர்களுடன் முதல் முறையாக கணவர் சுதாகரனைக் காண மனைவி சத்தியலட்சுமி வந்திருந்தார். சரியாக நண்பகல் 1.05 மணிக்கு சிறைக்குள் சென்றவர்கள், 2.45 மணிக்கு வெளியே வந்தனர். இந்தச் சந்திப்பில் சசிகலாவைவிட சுதாகரனின் மனைவி சத்தியலட்சுமி சந்திப்புதான் உறவினர்களை நெகிழவைத்துவிட்டது என்கின்றனர். ஆம், இருவரும் பார்த்த அடுத்த நிமிடமே உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் சிந்தி அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். சுதாகரனின் சிறை வாழ்க்கை, மனைவி சத்தியலட்சுமி மீதான அன்பு, பாசத்தை அதிகப்படுத்தியிருப்பதாகவே சசிகலா உள்ளிட்டவர்கள் உணர்ந்துள்ளனர். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்