[ad_1]
Coimbatore: கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
தமிழகம் முழுவதும், சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் வீடு, அலுவலகம் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள, கொடநாடு எஸ்டேட்டில் ஆறு நாள்கள் தீவர சோதனை நடத்தினர். எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் ரகசிய அறையில் வைத்து அதிகாரிகள் விசாரித்தனர்.
இதையடுத்து, அவரை கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு, கடந்த 14-ம்தேதி விசாரணை நடத்தப்பட்டது. மேலும், 16-ம் தேதி, கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, கோவையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் நடராஜன் நேற்று ஆஜரானார். காலை 11 மணி அளவில் நடராஜன் ஆஜரான நிலையில், அவரிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள் நீண்ட நேரத்துக்குப் பிறகே வந்தனர். இதனால், சற்று தாமதாகவே அவரிடம் விசாரணை தொடங்கப்பட்டது.
கொடநாடு எஸ்டேட் பரிவர்த்தனைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து அவரிடம் அதிகாரிகள் நீண்ட நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். மாலை 6.30 மணியளவில் விசாரணை முடிந்தது. நடராஜனோடு அவரது சகலை குலோத்துங்கனும் வந்திருந்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை!
TAGS :
COMMENTS