[ad_1]

காதலர் வீராவை இன்று திருப்பதியில் கரம்பிடித்தார், நடிகை நமீதா.



நடிகை நமிதாவுக்கு டும்டும்டும். நடிகை நமீதா - வீரேந்திர சவுத்திரி திருமணம், திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். திருமணத் தேதிகுறித்து முன்னரே அறிவித்திருந்த நமீதா, “நானும் வீராவும் நல்ல நண்பர்கள். நட்பு காதலாகி, காதலுக்குப் பின் உறவினர்களின் சம்மதத்தோடு நடைபெறும் திருமணம் இது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தனது காதல்குறித்து, இதற்கு முன்னர் நமீதா வெளியிட்டிருந்த கருத்தில், ”எனக்கு முக்கியத்துவம் தருகிற ஒருவருடன் இருப்பது பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். கடந்த 3 மாதங்களாக வீராவை நான் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளேன். அவர், எனக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம். அவருடைய ஆதரவு மற்றும் கனிவால் ஆண்களின் மீதான எனது நம்பிக்கை மீண்டு வந்துள்ளது. தொடக்க காலத்திலிருந்தே எனக்கு ஆதரவளித்துவரும் அனைவருக்கும் எனது நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.