[ad_1]





நாதுராம் கோட்ஸேவுக்கு கோயில் கட்டுவதற்காக, இந்து மகா சபா அடிக்கல் நாட்டியுள்ளது. 




குவாலியர் மாவட்ட நிர்வாகம், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேவுக்கு கோயில் கட்டத் தடை விதித்துள்ள நிலையில், அதையும் மீறி இந்து மகா சபை  அடிக்கல் நாட்டியுள்ளது. குவாலியரில் தவுலஜ்கனி பகுதியில் உள்ள இந்து மகா சபா அலுவலகப் பகுதியில், கோயில் கட்டப்பட உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவின்போது, இங்குள்ள கோட்ஸேவின் சிலைக்கு இந்து மகா சபையினர்  மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.

காந்தியை சுட்டுக் கொன்றதற்காக, 1949-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி நாதுராம் கோட்ஸே தூக்கிலிடப்பட்டார். அன்றைய தினத்தை தியாகத்திருநாளாக இந்து மகா சபையைச் சேர்ந்தவர்கள் கடைபிடிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம், கோயில் எழுப்புவதற்கு அனுமதி அளிக்க மறுத்த இடத்திலேயே, இந்து மகா சபா கோட்ஸேவுக்கு கோயில் எழுப்ப அடிக்கல் நாட்டியுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநில எதிர்க்கட்சிகள், இந்து மகா சபையின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் அஜே சிங் கூறுகையில், ''தேசப்பிதாவை கொலை செய்தவருக்கு கோயில் கட்ட மாநில அரசே ஆதரவாக இருக்கிறது. முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகானின் உதடுகள்தான் மகாத்மாவின் பெயரை உச்சரிக்கின்றது. அவரின் உள்ளத்தில் நாதுராம் கோட்ஸேதான் குடியிருக்கிறார். இல்லையென்றால், இந்து மகா சபையினர் இதுபோன்று பகிரங்கமாக எப்படிச் செயல்பட முடியும்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 



 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");