[ad_1]
"விவசாயத்தில் அரசு வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள் எவற்றையும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. இதன்பின்னே, பல கோடி ரூபாய் ஊழல் இருக்கிறது" என்று விவசாயிகள் குமுறத் தொடங்கியிருக்கின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் காவிரி ஆற்று நீர் மற்றும் கிணற்று நீர் பாசனம்மூலம் தற்போது பரவலாக நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், "இப்பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையமோ, வேளாண்மைத்துறை அதிகாரிகளோ புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குத் தெரிவிப்பதில்லை" என்று விவசாயிகள் புகார் புராணம் பாடுகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நம்மிடம் பேசினர்.
"குளித்தலையை அடுத்த புழுதேரியில் சரஸ்வதி வேளாண்மை அறிவியல் மையம் என்ற பெயரில் இந்திய வேளாண்மை அறிவியல் மையம், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவருகிறது. இந்த அறிவியல் மையத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் நிதி உதவி செய்துவருகின்றன. இதேபோல, கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியப் பகுதியிலும், வேளாண்மை உதவி இயக்குநர், தோட்டக்கலை அறிவியல் மையம், வேளாண்மைப் பொறியியல் மையம் மற்றும் வேளாண்மைத் துறையின் கீழ் பல்வேறு அமைப்பின் பெயரில் ஆத்மா திட்டம், உழவர் மன்றங்கள் செயல்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடும் வறட்சி நிலவிய நிலையில், விவசாயிகளான நாங்கள் தற்போது நகையை அடமானம் வைத்தும், வட்டிக்குப் பணம் பெற்றும் விவசாயம் செய்துவருகிறோம். இப்படிப்பட்ட சூழலில், எங்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள்குறித்து வேளாண் அதிகாரிகள் தெரிவிப்பதில்லை. மாவட்ட கலெக்டர், வேளாண்மைத் துறை, வேளாண்மை அறிவியல் மையம் மூலம் விவசாயம்குறித்து அவ்வப்போது உள்ள புதிய தகவல்கள்,நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்புகுறித்து உடனுக்குடன் தெரிவிக்க வலியுறுத்த வேண்டும். ஆனால், வேளாண்மைத்துறை அதிகாரிகள், சில விவசாயிகளையும் உழவர்மன்ற அமைப்பாளர்களையும் வைத்து நிகழ்ச்சி நடத்தியதுபோல படம் பிடித்துக்கொண்டு 80 சதவிகித எங்களைப் போன்ற அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். இதனால், பலகோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. கரூர் கலெக்டர், அறிவியல் மையம் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணிக்க வேண்டும். விவசாயிகளை ஏமாற்றி புதிய தொழில்நுட்பங்களைத் தெரிவிக்காமல் ஏமாற்றி, ஊழல் செய்யும் அதிகாரிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
"விவசாயத்துக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை அதிகாரிகள் தெரிவிப்பதில்லை!" - குமுறும் விவசாயிகள்!
TAGS :
COMMENTS