[ad_1]





எனக்குச் சரியென்று தோன்றினால் எத்தகைய துணிச்சலான கருத்துகளையும் சொல்லத் தயங்கமாட்டேன் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.





பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் எதிர்கட்சிகள் கருப்பு தினமாக கடைபிடித்தனர். அதேப்போல நவம்பர் எட்டாம் தேதி, 'தட்றோம்-தூக்றோம்' என்ற ஆல்பம் பாடல் இணையத்தில் வெளியானது. அந்தப் பாடலில் பண மதிப்பு நீக்கத்தை விமர்சித்தும், அதனால் மக்கள் பட்ட கஷ்டங்களை வெளிப்படுத்தும் வகையிலும் பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தன. இந்தப் பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருந்தார். நடிகர் சிம்பு இந்தப் பாடலை பாடியிருந்தார். இதனையடுத்து சிம்புவுக்கு பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தப் பாடல் குறித்து தெரிவித்துள்ள சிம்பு, 'எனக்குச் சரியென்று தோன்றினால் எத்தகைய துணிச்சலான கருத்துகளையும் சொல்லத் தயங்கமாட்டேன். அந்தப் பாடலை நான் எழுதவில்லை. இசையமைக்கவில்லை. என் படத்துக்கான பாடலுமில்லை. இந்தப் பாடலை பாடச் சொல்லிகேட்டார்கள். நன்றாக இருந்தது. மக்கள் பட்ட கஷ்டங்களை எடுத்துக் கூறியிருந்ததால் அதனைப் பாடினேன். அதில் தவறு ஒன்றும் இல்லை. பண மதிப்பு நீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததைத்தான் அதில் சொல்லியிருந்தார்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கோ, அந்தப் பாடலுக்கோ இல்லை' என்று தெரிவித்துள்ளார். 
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");