[ad_1]
'காற்று வெளியிடை 'படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தியின் நடிப்பில் விரைவில் வெளிவரப் போகும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. 'சதுரங்க வேட்டை' வினோத் எடுக்கும் இந்தப் படத்தில் கார்த்தி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுவதாகயிருந்தது. ஆனால், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் நாளை நடைபெறவிருந்த இசை வெளியீட்டு விழாவை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்துள்ளது.
ஆனால், திட்டமிட்டப்படி நாளை படத்தின் இசை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. சிறிது நாள்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கிய நிலையில் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கார்த்தி படத்தின் இசை வெளியீட்டு விழா மழையால் ரத்து..!
TAGS :
COMMENTS