[ad_1]
Coimbatore: கோவை காந்திபுரம் பகுதியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நவீன கழிப்பிடத்தை ஆய்வுசெய்தார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கோவை வந்துள்ளார். நேற்று, பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அவர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படும் சுகாதாரப்பணிகளை ஆய்வுசெய்தார். மேலும், 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் செயல்படும் பயோ டாய்லெட்டையும் ஆய்வு செய்தார். அப்போது, காந்திபுரம் பகுதியில் துடைப்பம் மூலம் குப்பைகளை அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, ஆளுநர் பன்வாரிலாலுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, அவர் சௌரிபாளையத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை செயல்படும் விதம்குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட அவர், இளம் தொழில் முனைவோர் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடனும் தூய்மை இந்தியா திட்டம்குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து, திருப்பூர் செல்லும் ஆளுநர், மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கோவை காந்திபுரத்தில் தூய்மைப் பணிகளை ஆய்வுசெய்த ஆளுநர்!
TAGS :
COMMENTS