[ad_1]





தேசியவாத சக்திகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுங்கள் எனக் கடிதம் எழுதிய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்கப் பேராயருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க, குஜராத் சட்டமன்றத்தேர்தலில் கட்டாயம் வெல்லும் நோக்கில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது.


தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டும் நிலையில் கத்தோலிக்க பேராயர் தாமஸ் மக்வான் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.அவர் அந்த கடிதத்தில், ''சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுவதால் ஜனநாயக வழியில் தேசியவாத சக்திகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுங்கள். தேசியவாத சக்திகள் தேசத்தை மொத்தமாக எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. குஜராத் தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்“ என்று கூறி இருந்தார்.


பின்னர் கடிதத்திற்கு விளக்கம் அளித்த தாமஸ், “குஜராத்தில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அரசியலமைப்பு உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்ற. நம் ஒவ்வொருவருடைய பிரார்த்தனையும் தேசத்தை தேசியவாத  சக்திகளிடம் இருந்து காப்பாற்றும்.இதுபோன்று கடிதம் எழுதுவது இது முதல் முறையல்ல. தேர்தலுக்கு தேர்தல், மக்களுக்கு வழிகாட்ட முயற்சி செய்கிறோம். பொதுமக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கிறோம்'' என்று தெரிவித்து இருந்தார். பேராயரின் கடிதம் குறித்த செய்தி குஜராத் பத்திரிகைகளில்  வந்துள்ளது.


இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரியும் காந்திநகர் கலெக்டருமான சத்தீஸ் பட்டேல், அந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளிக்கும் படி அந்த பேராயருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். காந்திநகர் ஆர்ச்பிஷப் ஆக இரண்டு ஆண்டுகளாக இருக்கும் மக்வான் கடந்த நவம்பர் 21-ம் தேதி இந்த கடிதத்தை எழுதி இருந்தார். இது சர்ச்சைக்குள்ளானதையடுத்து இப்போது தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");