[ad_1]
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைப்பதால் மழையின்றி அணைகளின் நீர்மட்டம் குறைந்துவருகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் வட கிழக்குப் பருவமழை பெய்யத் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்த கன மழையின் காரணமாக நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் பாபநாசம் அணை 100 அடியைக் கடந்தது.
அணைகளின் நீர்மட்டம் அதிகரித்ததால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், பணிகளைத் தொடங்கினர். ஆனாலும், சில விவசாயிகள் உடனடியாக பணிகளைத் தொடங்காமல் மழையின் போக்கைக் கவனித்துவந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக நெல்லை மாவட்டத்தில் மழை நின்றுவிட்டது. கடுமையான வெயில் வாட்டி வதைத்துவருகிறது. பருவ மழை பெய்யாத நிலையில் அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவதால் அணைகளின் நீர்மட்டம் குறையத் தொடங்கிவிட்டது. இது விவசாயிகளை கவலை அடைய வைத்துள்ளது.
அணைகளின் நீர்மட்டத்தை நம்பி பயிரிட்ட விவசாயிகளும் அச்சம் அடைந்து இருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி, நெல்லையின் பிரதான அணையான பாபநாசத்தில் 97.50 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து 781 அடியாக உள்ள நிலையில் வெளியேற்றம் 1404 அடியாக இருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 94 அடியாகக் குறைந்துவிட்டது. மணிமுத்தாறு அணையில் 81.95 அடி நீர் இருப்பு உள்ளது. அணைகளின் நீர்மட்டம் குறையத் தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மழையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அணைகளில் குறையும் நீர் மட்டம்! கவலையில் பயிரிட்ட விவசாயிகள்
TAGS :
COMMENTS