[ad_1]

குஜராத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, குஜராத்தில் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றுள்ளார். 





அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது, `ஒரு மனிதருக்கு மிக உயரிய பொறுப்பு கொடுக்கப்படும்போது, அதற்கு ஏற்ற கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். ஆனால், சிலர் அதை உணர்ந்தது போல் தெரியவில்லை. குஜராத்திலும் இந்தியாவிலும் பிரதமர் மோடி முன்னெடுத்த வளர்ச்சி அஜெண்டா உலகளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த உண்மையை காங்கிரஸ், தவறான தகவல்கள் மூலம் பரப்புரை செய்து மறைத்துவிட முடியாது. பா.ஜ.க-வுக்கு குஜராத் ஒரு முக்கியமான மாநிலம். கடந்த 22 ஆண்டுகளாக இங்கு நாங்கள்தான் ஆட்சியில் இருக்கிறோம். எனவே நாங்கள் வெற்றிபெறவே பார்ப்போம்' என்று ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");