[ad_1]





'கரூர் மாவட்டத்தில், தனியார் காலியிடங்களில் உள்ள உபயோகமற்ற பிளாஸ்டிக்குகளை உடனே அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் எச்சரித்துள்ளார்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் டெங்கு தடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதைப் பார்வையிட்டு, அப்பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரினேஷன் அளவைப் பரிசோதனைசெய்தார். கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு தடுப்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது.

கரூர் நகராட்சிக்குட்பட்ட கோடாங்கிப்பட்டி, ராயனூர், தில்லை நகர், காமராஜர் மார்க்கெட், இரட்டை வாய்க்கால், க.பரமத்தி ஒன்றியம் காட்டுமுன்னூர் ஊராட்சி ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்றுவரும் டெங்கு தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் வீடு வீடாகச் சென்று ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வின்போது, தண்ணீரில் குளோரினேட் செய்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வுசெய்தார். ராயனூரில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரினேஷன் அளவினை நேரடியாகப் பரிசோதனை செய்து, உரிய அளவில் குளோரினேஷன் உபயோகம் செய்வதற்கான ஆலோசனையை வழங்கினார். மேலும், அப்பகுதிகளில் உள்ள தனியார் காலியிடங்களில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருள்கள், டயர்களை அப்புறப்படுத்தும் பணிகளைப் பார்வையிட்டார். கோடாங்கிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுமேற்கொண்டு அப்பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். பின்னர், இரட்டை வாய்க்கால் தூர் வாரும் பணியைப் பார்வையிட்டவர், பணிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது, ";பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உபயோகமற்ற பொருள்களைச் சேமித்து வைத்துக்கொள்ளக்கூடாது, சுற்றுப்புறப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், வாரம் ஒருமுறை தொட்டிகளை நன்கு தேய்த்துக் கழுவி, சுத்தம் செய்தபின் தண்ணீரை சேமிக்க வேண்டும். தண்ணீரில் குளோரினேட் செய்தல் உள்ளிட்ட பணிகள், மாவட்ட நிர்வாகத்தின் கீழ் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகிறது.

அதனடிப்படையில் இன்று, ராயனூரில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரினேஷன் அளவு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்பகுதி தனியார் காலியிடங்களில் உயயோகமற்ற பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டது. அதேபோல, தனியார் இடங்களில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருள்களை வைத்திருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோடாங்கிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. க.பரமத்தி ஒன்றியம் காட்டுமுன்னூர் ஊராட்சியில் நடைபெற்ற மருத்துவ முகாமைப் பார்வையிட்டு , நிலவேம்புக் கஷாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டார்.