[ad_1]
கரும்பு விவசாயிகளுக்கு நான்கு ஆண்டுகளாகப் பாக்கியைத் தராமல் ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையை உயர்த்தியதை எதிர்த்து ரேஷன் கடைகளுக்கு முன்பு டிசம்பர் முதல்வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமைவகித்தார். அகில இந்திய பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லாவும் கலந்துகொண்டார். கூட்டத்தில், `இந்த ஆண்டு பருவமழை தாமதமாகத் துவங்கியதும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அக்டோபர் 2-ம் தேதிதான் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது; இதனால் மிகத் தாமதமாகவே விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டன. கூட்டுறவு வங்கிகளில் கடன்கோரிய விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படவில்லை. இந்நிலையில், நவம்பர் 30-க்குள் இந்த ஆண்டு பயிர்க்காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது சரியல்ல. எனவே, அனைத்துப் பயிர்களுக்கும் பிரீமியம் செலுத்துவதற்கான காலத்தை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், `தனியார் சர்க்கரை ஆலைகள் நான்கு ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த விலையைத் தரவில்லை. விலையை அறிவித்த தமிழக அரசு சட்டரீதியில் நடவடிக்கை எடுத்து கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையைப் பெற்றுத்தர வேண்டுகிறோம். மத்திய - மாநில அரசுகள் பொதுவிநியோகத் திட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதற்கு கடும் கண்டனத்துக்கு உரியது. ஒரு கிலோ ரூ.13.50 என ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டுவந்த சர்க்கரையின் விலை, திடீரென்று ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உளுந்து இனி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வழங்கப்படக்கூடிய துவரம் பருப்பும் மைசூர் வகையைச் சேர்ந்த தரம் குறைந்த பருப்பே வழங்கப்படுகிறது.
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு ஏற்ப மண்ணெண்ணெய் விலையை உயர்த்த உள்ளனர். மேலும், வறுமைக்கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்களின் ஸ்மார்ட் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் மறுக்கப்படும் நிலை உள்ளது. ஏழைகளுக்கு மானியங்களைக் குறைத்துவரும் மத்திய பா.ஜ.க அரசின் கொள்கைக்கு ஆதரவாகத் தமிழக அரசும் பொது விநியோக முறையை முற்றிலும் சீர்குலைத்துவருகிறது. பொதுவிநியோக முறை சீர்குலைக்கப்பட்டால், பல லட்சம் ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே, பொதுவிநியோக முறையைச் சீரழிக்காதே! ரேஷன் சர்க்கரை விலை உயர்வை கைவிடு! துவரம்பருப்பு, உளுந்து ஆகியவற்றை கொள்முதல் செய்து ரேஷன் கடை மூலம் விநியோகம் செய். அனைத்து ஏழை மக்களுக்கும் உணவுப் பொருள்களை ரேஷன் கடைகளில் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி வரும் டிசம்பர் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ரேஷன் கடைகள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கரும்பு பாக்கியைத் தரவில்லை, சர்க்கரை விலையை ஏற்றுவதா? - போராட்டத்தில் குதிக்கும் விவசாயிகள்
TAGS :
COMMENTS