[ad_1]





வருமான வரித்துறை சோதனையை அடுத்து, திவாகரன் இன்று திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், திவாகரன் இன்று ஆஜராகவில்லை.




சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் ஐந்து நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி என 82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. 


இதையடுத்து, சோதனைக்குப் பின்னர் புகழேந்தி, விவேக் ஜெயராமன் உள்ளிட்ட சிலர் வருமான வரித்துறை அலுவலகங்களில் நடந்த விசாரணையில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். இந்நிலையில் இன்று, திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் திவாகரன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், திவாகரன் இன்று ஆஜராகாததால், அவருக்கு அடுத்த வாரம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");