[ad_1]
";வேதா இல்லத்தில் நடந்த சோதனை, வேதனை அளிக்கிறது” என அமைச்சர் ஜெயக்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில், கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் ஐந்து நாள்களாக சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில் நேற்று இரவு, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், போயஸ் கார்டனில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்தச் சோதனையால் வேதனை அடைந்திருப்பதாகக் கூறும் அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர். அவரது இல்லத்தில் சோதனை என்பது வேதனை தருகிறது. போயஸ் கார்டனில் சோதனை நடக்க தினகரன் குடும்பம்தான் காரணம். வருமான வரிச் சோதனையை திசைதிருப்பி ஆதாயம் தேடப்பார்க்கிறார்கள். ஆனால், எதுவும் நடக்காது. சசிகலா குடும்பத்தாலேயே ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரிச் சோதனை நடைபெறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார்.
’சோதனை வேதனை அளிக்கிறது’: அமைச்சர் ஜெயக்குமார்
TAGS :
COMMENTS