[ad_1]
கோவை மாவட்டத்தில், மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை ஆமோகமாக நடந்துவருகிறது என்று நீண்ட நாள்களாக எழுந்துவந்த புகார் இப்போது ஊர்ஜிதமாகியிருக்கிறது. துடியலூரில் உள்ள அரசுப் பள்ளி வளாகம் அருகே கஞ்சா விற்பனை செய்தவனை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.
கோவை துடியலூரை அடுத்து இருக்கிறது அசோகபுரம் ஊராட்சி. அங்கு உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று மாலை பள்ளி விட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது, பள்ளி அருகே உள்ள ஓர் சந்தில் சில மாணவர்கள் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர். அதனைப்பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் என்னமோ ஏதோ என்று பதறிப்போய் அங்கு ஓடி பார்த்திருக்கிறார்கள். கல்லூரி மாணவன் போன்ற தோற்றத்தில் இருந்த ஒருவன், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதைப் பார்த்ததும் கொதித்தெழுந்த பொதுமக்கள் கஞ்சா விற்பனை செய்தவனை வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். கஞ்சாவுக்காக காத்திருந்த மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவனை பிடித்ததையடுத்து, துடியலூர் போலீஸாருக்கு தகவல் தந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கஞ்சா விற்பனை செய்தவனை பிடித்து வைத்துக் கொண்டு துடியலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் அவனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், கஞ்சா விற்றவன் கவுண்டம்பாளையம் தேமையன் வீதியைச் சேர்ந்த தஜ்மால் உசேன் என்பவரின் மகன் நிஹால் என்றும், தனது பையில் 4 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இது குறித்து துடியலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா பட்டுவாடா ஜோர்... என்ன செய்கிறது கோவை போலீஸ்..?
TAGS :
COMMENTS