[ad_1]





'வங்கி பறிமுதல்செய்த ஆட்டோவை மீட்டுத் தரவேண்டும்' என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் ஆட்டோ ஓட்டும் தொழிலாளி மனு அளித்துள்ளார். 




கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த கஞ்சிக்குழியைச் சேர்ந்தவர், ரிச்சர்டு சாலமோன். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்துவருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு, கருங்கல் சிண்டிகேட் வங்கியில் இருந்து ஆட்டோ வாங்குவதற்காக 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். அவர், கடந்த ஏப்ரல் மாதம் வரை முறையாக பணத்தை வங்கியில் செலுத்திவந்துள்ளார். இந்நிலையில், திடீரென ரிச்சர்டு சாலமோன் நோய்வாய்ப்பட்டு, இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் ஆட்டோ ஓட்டமுடியாமல் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்துள்ளார். இதனால், வருமானம் இல்லாமல் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது,


மேலும், வங்கியிலும் பணம் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து ஆட்டோவை பறிமுதல்செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சாலமோன், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார். ஆட்டோ இல்லாததால் தொழில் செய்யமுடியாத நிலை இருப்பதாகவும், தனது குடும்பம் வறுமையில் தவிப்பதாகவும், வங்கி அதிகாரியின் தூண்டுதலில்தான் அடியாட்கள் ஆட்டோவை எடுத்துச்சென்றுள்ளனர். எனவே, தனது குடும்பச் சூழ்நிலையைக் கருதி, ஆட்டோவை மீட்டுத் தருமாறு ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");