[ad_1]
சென்னை மாவட்டம் பள்ளிக்கரணை அருகே உள்ள நாராயணபுரம் ஏரியை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேரில் ஆய்வுசெய்து வருகிறார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில், வடகிழக்குப் பருவ மழையால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், வெள்ளப் பாதிப்படைந்த பகுதிகளை அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆய்வுசெய்துவருகின்றனர். இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா உடன் பள்ளிக்கரணை அருகே உள்ள நாராயணபுரம் ஏரியை தற்போது பார்வையிட்டு ஆய்வுசெய்துவருகிறார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த், “அரசு நிதி, மக்களுக்கு ஒதுக்கப்படவே இல்லை. அத்தனை நிதியும் அரசியல்வாதிகளுக்குத்தான் ஒதுக்கப்படுகிறது” என்றார். மேலும் கமல்ஹாசனின் அரசியல் வருகைகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அதை நான் வரவேற்பேன்” எனக் கூறினார். தற்போது, நாராயணபுரம் ஏரியைத் தொடர்ந்து கல்லுக்குட்டை பகுதியில் உள்ள ஏரியை விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டு ஆய்வுசெய்ய உள்ளார்.
’கமல் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்’: ஏரியை ஆய்வுசெய்த விஜயகாந்த் பேட்டி
TAGS :
COMMENTS