[ad_1]







பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச எரிவாயு வழங்கும் விழா நேற்று திருப்பூரில் நடைபெற்றது. விழாவில் பா.ஜ.க-வின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். 


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், `பிரதமரையும், பாஜகவையும் தமிழகத்தில் பலர் தொடர்ந்து விமர்சனம் செய்தாலும் மக்களிடத்தில் அவரது செல்வாக்கு  அதிகரித்துக்கொண்டே வருகிறது. முத்ரா வங்கித் திட்டத்தின் மூலமாக வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 53 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை 1 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களிடம் செயல்படுத்தியுள்ளோம். வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்ற 5 கோடி மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க பா.ஜ.க ஆட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற மக்கள் நல நடவடிக்கைகளின் மூலமாக, இந்தியாவில் பிரபலமானவர்களில் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முன்னணியில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆட்சிகளில் மீனவர் நலன் பாதுகாக்கப்படவில்லை. ஆனால் பா.ஜ.க.வின் ஆட்சியில் தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். கடற்படை தமிழக மீனவர்களை காயப்படுத்தியதாக தகவல் அறிந்தவுடன் பா.ஜ.க சார்பில் வருத்தமும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");