[ad_1]
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தை, மேலும் விரிவுபடுத்துவதற்காக, அந்த விமான நிலையத்தை ஒட்டியுள்ள திருச்சி பாரதி நகர், ஜே.கே. நகர் போன்ற பகுதிகளைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளை அளவீடு செய்யும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர். திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான 683 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், 354 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் வட்டங்களில் தேவையான இடங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டோம்.. பானுமதி : "சுமார் 60 வருடங்களுக்கு மேலாக, நாங்கள் இங்கு வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதிக்கு நாங்கள் குடியேறும்போது, இந்தப்பகுதி அடர்ந்த காடு போல இருந்தது. நாங்கள் அன்றாடம் வேலைசெய்து, இதை வாழுமிடமாக மாற்றி அமைத்தோம். பின்னர், இடுகாடு அமைத்து சிறிதாக இந்தப் பகுதியில் மாற்றத்தைக் கொண்டு வந்தோம். இந்நிலையில், இதுமாதிரியான அறிவிப்பு எங்களை பெரும் துயரத்தில் ஆழ்த்துகிறது. திடீரென்று ஒரு மாதத்திற்குள் வீட்டைக் காலிசெய்ய வேண்டும் என்றால், அது எப்படி முடியும்? எங்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் வேண்டும். ஏர்போர்ட் விரிவாக்கப் பணிகள் நடைபெறும்போது, வீட்டிற்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வேண்டும். புதிய வீடு கட்டிக்கொள்ள மாற்று இடமும், கையகப்படுத்தப்படும் இடத்திற்கு உரிய தொகை வழங்கப்பபட வேண்டும்". வீரம்மாள் : "நில அளவீடு செய்ய வந்தவர்கள், வீட்டிற்குள் நுழைந்து செய்து 'நீங்கள் வீட்டைக் காலிசெய்ய வேண்டும்' என்றவுடன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மயக்கமடைந்து விழுந்து விட்டேன். இவ்வளவு காலம் வாழ்ந்த இந்தப் பகுதியைவிட்டு நாங்கள் எப்படி வெளியேறுவது? இங்கே உள்ள கோயிலையும் அளவீடு செய்தார்கள். எங்களுக்கான அனைத்துத் தேவைகளையும் இங்கே அமைத்துக்கொண்ட பிறகு, குறுகிய கால அவகாசத்தில் எங்களை வெளியேறச் சொல்வது எங்களது வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்". லட்சுமி : "வீட்டை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள், ஒரு முன்னெச்சரிக்கை இல்லாமல், ஏதோ படத்தில் சோதனை நடத்த வருவதுபோன்றுபோலீஸாருடன் வந்து, 'அது என்ன? இது யாருடையது?' என்று கேட்டார்கள். எங்களை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். 'வீட்டிற்கேற்ப பணம் தரப்படும்' என்றனர். எங்களின் வீட்டிற்கு உரிய இழப்பீட்டை வழங்குவார்களா? என்பது தெரியவில்லை. இப்படி திடீரென்று புதிதாக வேறொரு இடத்திற்குக் குடியேறச் சொன்னால் முன்பணம், வாடகை இதற்கெல்லாம் நாங்கள் என்ன செய்வது? இது அரசு இடம் என்றால், எங்களுக்கு வீடுகட்ட ஏன் மாநகராட்சி அனுமதி வழங்கியது? மேலும், வீடுகட்டுவதற்குக் கடன் எப்படி வழங்கினார்கள்?" என்ற கேள்விகளை எழுப்பினார். இந்தப் பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையில் ஏதும் நடவடிக்கை எடுத்தார்களா? என்று அவர்களிடம் கேட்டபோது, "எங்கள் பகுதி வார்டு உறுப்பினர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வோ இதுவரை இந்தப் பகுதிக்கு வந்து எங்களைச் சந்தித்தது கிடையாது" என்று குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதுதொடர்பாக நில அளவீடு செய்யும் வருவாய்துறை அதிகாரிகளின் கருத்துகளை அறிய அவர்களைத் தொடர்பு கொண்டோம். "விமான நிலைய விரிவாக்கத்திற்காக, சுமார் 300 வீடுகளை அளவீடு செய்ய வேண்டியுள்ளது. பாரதி நகர் மற்றும் ஜே.கே நகரில் 42 வீடுகள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் 15-ம் தேதிக்குள் வீடுகளை அளவீடு செய்யும் பணிகளை முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1997-ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மூன்றாம் பிரிவின் இரண்டாவது உட்பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க, கையகப்படுத்த உள்ள இடத்தை, 'ஏன் கையகப்படுத்தக் கூடாது' என்பதற்கான காரண அறிக்கையை 30 நாளில் வழங்க வேண்டும் என அரசு சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த அனைவருக்கும் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.
அரசு அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்குமா? இல்லை, அவர்களுக்கு உரிய கால அவகாசம் அளிக்குமா? இந்தப் பகுதியில் மக்கள் வீடுகட்ட மாநகராட்சி எப்படி அனுமதி வழங்கியது? போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'எங்களுக்கு ஒரு மாதம்தான் கெடு' - திருச்சி விமான நிலைய விரிவாக்கத்தால் புலம்பும் மக்கள்!
TAGS :
COMMENTS